சிறுநீரகங்களை சரியான முறையில் செயல்பட வைக்க.....
நமது சிறுநீரகங்களை சரியான முறையில் செயல்பட வைக்க உடலில் போதுமான அளவு நீர் சத்து இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது குறைவாக இருந்தால் சிறுநீரக இயக்கம் பாதிக்கும். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், இதன் அறிகுறியாக கருதலாம். குறைவாக நாம் தண்ணீர் குடிக்கும்போது அது ரத்தத்தில் நச்சுப்பொருட்களைச் சேமித்து வைத்து சிறுநீரகங்களைச் சிரமப்பட்டு செயல்பட வைக்கிறது. இதனைத் தவிர்க்க தினமும் 8 முதல்10 கிளாஸ் வரை தண்ணீர் அருந்துவது நல்லது.சிறுநீரை அடக்கி வைத்திருந்தால் அது சிறுநீர்ப்பையிற்கு அழுத்தம் கொடுக்கும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும். சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைப்பதன்மூலம் அது சிறுநீரகப் பையில் அதிக நேரம் இருந்து அதிகப்படியான கெட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி, நோய் தொற்று ஏற்படக் காரணமாகிறது. எனவே, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீர் கழித்துவிடுங்கள்.
உடலில் உப்பின் அளவு அதிகமாகும்பொழுது அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். இதற்காக வேறு நிவாரணிகளை எடுத்துக்கொண்டால் அதுவும் காலப்போக்கில் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தினசரி5 முதல்8 கிராம் உப்பிற்கு மேல் எடுத்துக்கொள்ளாதீர்கள். அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களைச் சாப்பிடுவதைத் தவி்ர்க்கவும்..அதிகப்படியான புரோட்டீன் உணவுகள் உடலில் அம்மோனியாவை உருவாக்கும். இது சிறுநீரகங்களை பாதிக்கும் நச்சுப் பொருள். எனவே, எவ்வளவுக்கு எவ்வளவு மாமிச உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் சிறுநீரகங்களுக்கு ஆபத்து. எனவே, மாமிச உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.காபி, டீ, சோடா மற்றும் குளிர்பானம் போன்ற காஃபின் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களைப் பாதிக்கும். எனவே, காஃபின் பானங்களைத் தவிர்ப்பது நல்லது.
உடலில் எந்த ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டாலும் உடனே அதனை சரிசெய்ய வேண்டும். காரணம் உடலின் சிறு பிரச்னைகள்கூட உங்களது சிறுநீரகச் செயல் பாடுகளைப் பாதிக்கும்.கால்சியம் உடலில் தேங்கி நிற்கும்பொழுது சிறுநீரகக் கற்கள் ஏற்படும். இதனைத் தடுக்க வேண்டும் என்றால் காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.. இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பவர்களுக்கும் சிறுநீரக பாதிப்பு இருக்கும். ஏனெனின் சிறுநீரக திசுக்கள் இரவு நேரங்களில்தான் புதுப்பிக்கப்படும்.
0
Leave a Reply